சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் – பத்தி – பாகம் 14


ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது . சின்னன் பொன்னனுகளை ஞாபகப்படுத்திறது நல்ல விசையம் கண்டியளோ . ஆனால் சுறுக்கருக்கு எப்பவும் வில்லங்கமாய் மண்டையிலை ஓடுறது பரவணி புத்தியாய் போச்சுது. நாங்கள் உண்மையிலை சின்னனுகளை நல்லவிதமாய் பாத்தாமோ எண்டு நெஞ்சிலை கைவைச்சு கேட்டால் மனுசனுக்குப் பிறசர் தான் ஏறும்.ஒருகாலத்திலை சண்டை பிடிக்கிறம் எண்டு குஞ்சு குருமனுகளை கொண்டு போய் முன்னாலை விட்டுப்போட்டு பின்னாலை நாங்கள் கவர் எடுத்தம் . அங்காலை மகிந்தனும் சின்னன் பொன்னனுகளைத்தான் எயிம் பண்ணி அடிச்சான் ஏனெண்டால் அதுகள் ரெறறிஸ்ட்டாம். இதுகளுக்கை தப்பி பிழைச்சதுகளை சந்தணம் மெத்தினதுகள் போய் சின்ன வயசிலையே படுக்க வாங்கோ பிள்ளையள் எண்டு கூப்பிட்டீச்சினம். உந்த பழிபாவங்கள் எல்லாம் எங்கடை சனத்தை பிடிச்சு ஆட்டுது கண்டியளோ .

ஆசியாவிலை எங்கடை நாடுதான் மழலைகள் பாலியலிலை கொடிகட்டி பறக்குது . இதுக்கெண்டே வெள்ளையள் அங்கை போய் சொர்க்கத்தை காணினம் எண்டால் பாருங்கோவன். ஏனெண்டால் அவையளுக்கு இங்கை சின்னனுகளிலை கையைக் காலைப் போட்டால் பெரிய பிரச்சனையாய் போடும். இது காணாதெண்டு அங்கை பள்ளிக்கூடத்துக்கு போற வாற பெடி பெட்டையள் ஒழுங்காய் போய் வரேலாமல் கிடக்கு. எங்கடை சனமே அவ்வளவு கம்புக்காய்ச்சலிலை திரியுதுகள். அதுகளை ரேஸ்ட் பண்ணிப்போட்டு கோதாரியிலை போவார் மேர்டர் எல்லோ பண்ணுறாங்கள். சுறுக்கரை கேட்டால் உவங்கள் தரவளிக்கு பாக்குவெட்டி றீட்மெண்ட் தான் சரி.அதோடை அவைக்கு நல்லாய் செக்ஸ் எண்டால் என்ன எண்டு படிப்பிக்கவேணும் கண்டியளோ .

சும்மா இண்டைக்கு மாத்திரம் ஹப்பி சில்றன்ஸ் டே எண்டு சொல்லாமல் நாங்களும் மாறவேணும். சின்னனுகளை சின்னனாய் இருக்க விடவேணும். இங்கை அதுகளுக்கு அது பழக்கிறன் இது பழக்கிறன் எண்டு அதுகளை ராச்சர் பண்ணாமல் இருக்கவேணும் .முக்கியமாய் சண்டையிலை எபெக்ட் ஆன சின்ன பிள்ளையளை ஒராளை தன்னும் தத்து எடுத்து நாங்கள் படிப்பிக்க வேணும். பேந்து அதுகள் உங்களை கடைசி வரைக்கும் மறக்க மாட்டுதுகள். இதுகளையெல்லாம் உடனை செய்யவேணும். இல்லாட்டில் எங்கடை சின்னனுகளை ஆராலையும் காப்பாத்தேலாது .

சுருக்கு சுறுக்கர்

01 புரட்டாசி 2017

(Visited 8 times, 1 visits today)