மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் – இறுதிப்பாகம்

வணக்கம் வாசகர்களே !

இதுவரையில் ஏறத்தாள 40க்கு மேற்பட்ட குருவிகளையும் , ஒருசில அழியும் தறுவாயிலுள்ள பறவையினங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் . இவ்வளவு நாளும் எனது குருவிகள் எல்லாம் உங்கள் அன்பிலும் , பராமரிப்பிலும் திக்குமுக்காடினார்கள் . எனது குருவிகள் எல்லோரும் வலசை போகவிருப்பம் தெருவித்தமையால் இன்றுமுதல் இந்தக்குருவிக் கூட்டைக் கலைத்து வானத்தில் பறக்கவிடுகின்றேன் .

கோமகன்

00000000000000000000000000000

41 நாகணவாய் புள் – மைனா – starling – oxpecker- Buphagus africanus

starlingகள் மற்றும் oxpecker களுடன் சேர்த்து, மைனாக்கள் ஸ்ட்டேண்டிடே குடும்பத்துள் அடங்குவன. பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியா]]வுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன.

உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டுகின்றன.

http://ta.wikipedia….a.org/wiki/மைனா

0000000000000000000000000000000000

42 காரோதிமம் – கறுப்பு அன்னம் – black swan-Cygnus atratus

Trauerschwan, Schwarzer Schwan, Cygnus atratus, mit Kueken / Black Swan with chicks

காரோதிமம் என்பது பிரதானமாக அவுசுதிரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் அளவிற் பெரிதான நீர்ப்பறவை இனமாகும். நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கே வேட்டையாடப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அவுசுதிரேலியாவில் இது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயரும் ஓருயிரனமாகவே காணப்படுகின்றது. கறுப்பு அன்னம் உடல் முழுவதும் கருமையாயும் சொண்டு சிவப்பாயுமுள்ள பெரிய பறவைகளுள் ஒன்றாகும்.

கறுப்பு அன்னத்தை முதன் முதலில் 1790 ஆம் ஆண்டு விஞ்ஞான ரீதியில் விளக்கியவர் ஆங்கிலேய இயற்கையியலாளரான ஜோன் லதாம் ஆவார். கறுப்பு அன்னங்கள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ காணப்படும். சில வேளைகளில் அவை நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் சேர்ந்திருக்கும். கறுப்பு அன்னங்கள் விலங்கியற் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பிரபலமானவையாகும். சில வேளைகளில் அவை காப்பகங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதால் அவற்றின் இயற்கை வாழிடத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் காணப்படுவதுண்டு.

கறுப்பு அன்னம் பொதுவாக கரு நிற இறகுகளையும் வெண்ணிற பறத்தல் இறகுகளையும் கொண்ட பறவையாகும். அதன் சொண்டு பளிச்சென்ற செந்நிறத்திலமைந்திருப்பினும் சொண்டின் ஓரங்களும் முன் பகுதியும் வெளிறியதாகவே இருக்கும். அதன் கால்களும் பாதங்களும் சாம்பல் நிறம் கலந்த கறுப்பாகவே அமைந்திருக்கும். கறுப்பு அன்னங்களின் ஆண் பறவைகள் அவற்றின் பெண் பறவைகளை விட ஓரளவு பெரியவையும் ஒப்பீட்டளவில் நீண்டு நேரான சொண்டுகளையும் கொண்டிருக்கும். அவற்றின் குஞ்சுகள் சாம்பல் கலந்த கபில நிறத்தில் காணப்படுவதோடு ஓரங்கள் வெளிறிய இறகுகளைக் கொண்டிருக்கும்.

வளர்ந்த கறுப்பு அன்னமொன்று 110-142 ச.மீ. (43–56 அங்குலம்) நீளமும் 3.7–9 கி.கி. (8.1-20 இறாத்தல்) நிறையும் கொண்டிருக்கும். அதன் இறக்கைகளை விரிப்பதால் பெறப்படும் நீளம் 1.6-2 மீற்றராகும் (5.3-6.5 அடி). கறுப்பு அன்னத்தின் கழுத்து ஏனைய அன்னங்களின் கழுத்தின் நீளத்தை விடவும் மிக நீண்டது என்பதுடன் “S” வடிவத்தில் வளைந்து காணப்படும்.

கறுப்பு அன்னத்தின் ஒலி நீண்ட தூரம் கேட்கக் கூடியதும் மெல்லிசை போன்றும் இருக்கும். அத்துடன், அது இரை தேடும் வேளைகளிலோ அடையும் வேளைகளிலோ ஏதும் குழப்பமுறக் காணின் சீட்டியடிக்கக் கூடியதாகும்.

நீந்தும் வேளைகளில் கறுப்பு அன்னம் தன் கழுத்தை நன்கு வளைத்தோ அல்லது நன்கு நேராகவோ வைத்திருக்கக் கூடியதாகும் என்பதுடன் அதன் இறகுகளை அல்லது சிறகுகளை மூர்க்கமாகத் தோன்றும் வண்ணம் மேல் நோக்கி வைத்திருக்கும். கூட்டமாகப் பறக்கும் போது கறுப்பு அன்னங்கள் நேர் கோட்டிலோ அல்லது V வடிவத்திலோ பறக்கும் தன்மையுள்ளன. அக்கூட்டத்தில் பறக்கும் ஒவ்வொரு பறவையும் பல்வேறு வகையிலான ஒலிகளை எழுப்பிக் கொண்டும் சிறகுகளினால் அசைவுகளைக் காட்டிக் கொண்டும் பறக்கும் தன்மையுள்ளதாகும்.

பண்டைத் தமிழிலக்கியங்களிலும் (சிலப்பதிகாரத்தில்), உரையாசிரியர்களாலும் காரோதிமம் எனும் பெயரில் கறுப்பு அன்னம் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகை அன்னமானது, 18 ஆம் நூற்றாண்டு வரை எந்தவொரு மேற்கத்தேய நூல்களிலும் காணப்படவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கறுப்பு அன்னமானது அவுசுதிரேலியாவின் தென்மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலும் அவற்றை அண்டிய கரையோரச் சிறு தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. அத்துடன் அவை தஸ்மானியாவிலும் முரே டார்லிங் படுகையிலும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. எனினும் கறுப்பு அன்னங்கள் அவுசுதிரேலியாவின் வட பகுதியிலோ நடுப் பகுதியிலோ பொதுவாகக் காணப்படுவதில்லை.

கறுப்பு அன்னம் 1979 ஆம் ஆண்டின் அவுசுதிரேலிய தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சட்டம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது மிகக் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

http://ta.wikipedia…./கறுப்பு_அன்னம்

March 04, 2013

(Visited 10 times, 1 visits today)