கெடுகுடி சொல் கேளார் – அனோஜன் தம்பிக்கு ஒரு பகிரங்கக்கடிதம் -எனது கதையாடல் தொடர்பாக

அன்பான அனோஜன் தம்பிக்கு வணக்கம்,

உங்கள் பதிலில் இருந்து இரண்டு வகையான உணர்வலைகளை என்னால் உள் வாங்க முடிகின்றது.

01 உங்களைப் போன்றவர்களை முதியோர் மதிக்காமை.
02 ஜெயமோகன் மீது ஒரு தூசி விழுந்தாலும் அது கண்டு பொறுக்காமை.

முதலாவது விடயத்தில் இளையவர்கள் தொடர்பில் அவர்களை தட்டிக்கொடுப்பதில் யாருமே தயங்கியதில்லை. இல்லாவிடில் உங்கள் எழுத்துகள் பெரிய அளவில் கவனப்படுத்தாது போய் விடும். அதேவேளையில் முதியவர்கள் என்றுமே தவறுக்கு துணை போனதில்லை. ஆனால் சில புற நடைகளும் உண்டு என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உங்களைப்போன்றவர்களை மனப்பூர்வமாக தட்டிக்கொடுப்பதில் நானே நேரடி சாட்சியாக இருக்கின்றேன்.

இரண்டாவதாக ஜெயமோகன் கூறியதாக சொல்லப்படும் விடயத்தை தெளிவு படுத்துவது தொடர்பாக எனது கதையாடல் இருந்தது. அது தொடர்பாகவே கருத்துக்களும் வந்திருக்கின்றன . நீங்கள் சொல்லியதால் பின்னர் நானும் என்னை சுயபரிசீலனை செய்து நீங்கள் சொல்வதில் உண்மைத்தன்மை உள்ளதா என்று அறிய முற்பட்டேன். அதில் எனக்கு சாதகமான பக்கங்களே அதிகம் இருக்கின்றன. நீங்கள் ஜெயமோகனை கொண்டாடுவது, ஆஹாசத்தில் மிதப்பது உங்களது உரிமை. அதில் பொல்லாப்பு ஏதுமில்லை. ஆனால் பொது உண்மை என்ற ஒன்று இருக்கிறது. அந்த உண்மைக்கு எதிராக யாராவது குரல்தந்தால் அது வரலாற்றின் கறுப்புப் பக்கத்தில் பதியப்படும். அதேவேளையில் இந்திய அமைதிப்படையனாரால் பாதிக்கப்பட்ட வரலாற்றுச்சாட்சியங்கள் எம்மிடையே நிறையவே உண்டு. அது தொடர்பான ஆவணங்களும் உண்டு. ஆக இதில் திரிபு படுத்தல் என்பது முரண் நகையானதே.

ஜெயமோகனின் வலைத்தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் அவரது நேர்காணல்கள் எம்மிடையே ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன . எதற்கும் அறிதலுக்காக பின்வரும் இணைப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இது தொடர்பான கதையாடல்களினால் எமக்கிடையிலான நட்ப்புணர்வுகளில் எதுவித பங்கமும் ஏற்படாது என்ற உறுதிமொழியையும் தருகின்றேன். கோழி கொத்தி குஞ்சுகள் என்றாவது இறந்ததை பார்த்திருக்கின்றீர்களா?

ஜெயமோகனை விடுத்து, சில புரிதல்களுக்காக வாசுதேவன் எழுதிவரும் மெய்யியல் தொடர்பான கட்டுரைகளை ஊன்றிப் படித்திடுமாறு வேண்டுகின்றேன். அது சில தெளிவுகளை உங்களுக்கு கொடுக்கலாம். நன்றி .

01 https://www.vikatan.com/…/121686-writer-jayamohan-interview…

02 https://www.jeyamohan.in/27901/#.XrulnsDgqUl

03 https://www.jeyamohan.in/27320/#.Xrulv8DgqUl

04

http://www.shobasakthi.com/…/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e…/

(Visited 64 times, 1 visits today)