கோமகன் செப் Chéf இன் பக்குவம் -கிச்சடி-பாகம் 01

 

 

 

 

 

 

தேவையான பொருட்கள்:

பொன்னி அரிசி 3 கப் .

மைசூர் பருப்பு 1 கப் .

தக்காளிப் பழம் 3 அல்லது 4 .

செத்தல் மிளகாய் 8 அல்லது 9 .

உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு .

கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு .

மிளகாய்தூள் 1 1/2 கறண்டி .

மஞ்சள் சிறிதளவு .

பக்குவம்:

பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 1/2 கறண்டி தூள் ஐயும் , மஞ்சளையும் போட்டு மூடியால் மூடி 2 விசில் விடுங்கள் . பிறசர் (Presher ) இறங்கியதும் திறந்து கொத்தமல்லிக் கீரையைப் போட்டு மூடி விடுங்கள் . கிச்சடி தயார் . இதுக்கு சேர்மதியாக பச்சடி செய்ய வேண்டும் .

பச்சடி

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் 6 .

யோகூர்ட் ( தயிர் ) 3 அல்லது 4 (125 g) பெட்டி .

பச்சை மிளகாய் 4 அல்லது 5 .

பக்குவம்:

வெங்காயத்தை குறுணியாக வெட்டுங்கள் . சின்ன மிளகாயையும் வெட்டுங்கள் . வெட்டியதை தயிரில் போட்டு சிறிதளவு கொத்தமல்லி இலையை கிள்ளி போடுங்கள் . பச்சடி தயார் . பொரித்த அப்பளமும் இருந்தால் இன்னும் தூக்கும் .

January 24, 2013

(Visited 7 times, 1 visits today)