கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 08

தோசைக்கறி

 

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 08இந்தப் பக்குவத்திற்கு திருமதியிடம் மல்லுக்கட்ட வேண்டியதாகிவிட்டது . இந்தப் பக்குவம் பருத்தித்துறையின் பாரம்பரியம் . பரம்பரை பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஒரு பக்குவம் .

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் அரை கிலோ 500 கிறாம் .

சின்னவெங்காயம் 200 கிறாம் .

பச்சைமிளகாய் 200 கிறாம் .

வெந்தயம் 2 மேசைக்கறண்டி .

பழப்புளி எலுமிச்சம்பழம் அளவு .

தனிமிளகாய் தூள் உறைப்புக்கு ஏற்றவாறு .

உப்பு மஞ்சள் தேவையான அளவு .

பக்குவம் :

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணியில் போடவும் . பச்சை மிளகாய் , சின்ன வெங்கயத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும் . வெட்டிய கத்தரிக்காயை வெதுப்பியில் உள்ள ட்றேயில் சிறிது எண்ணையை பூசி , வெட்டிய கத்தரிக்காயை பரவவும் . வெதுப்பியில் 300 பாகை c யில் பொன்நிறமாகும்வரை கிறில் பண்ணவும் ( *********** ) . தாச்சியில் சிறியளவு எண்ணையை விட்டு வெந்தயத்தை பொன்னிறமாகும்வரை பொரிக்கவும் . பின்பு பச்சைமிகாய் சின்னவெங்காயத்தை போட்டு வதக்கவும் . பழப்புளியை சிறிய அளவு தண்ணீரில் தடிப்பாகக் கரைக்கவும் . பச்சைமிளகாய் வெங்காயம் வதங்கியவுடன் , பொரிச்ச கத்தரிக்காயை கொட்டி மிளாகாய்தூள் மஞ்சள் எல்லாவற்றையம் போட்டு பழப்புளி கரைசலைச் சேருங்கள் . ( அதிக தண்ணி கூடாது . ) மெதுவான வெக்கையில் கறி இறுகும்வரை விடவும் . இப்ப தோசைக்கறி றெடி .

********* வெதுப்பி இல்லாதவர்கள் தாச்சியில் பொரிச்சு அள்ளவும் .

படிமானம் :

ஒரு நாள் முழுக்க வைத்திருந்து விட்டு அடுத்தநாள் தோசையோடை , மனிசி / கணவர் பிள்ளைகளுடன் , முக்கியமாய் சீரியல் ரீவியில பாக்காமல் சாப்பிடுங்கோ . சம்பல் மாதிரி தொட்டுச் சாப்பிடுங்கோ . கனக்கச் சப்பிட்டால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை .

January 28, 2013

(Visited 4 times, 1 visits today)