சுறுக்கரின் இலக்கிய ரசம்- பாகம் 01

அந்தக்காலத்து லவ்சிலை கொஞ்சம் வித்தியாசமாய் பெடியள் திங்க் பண்ணி இருக்கிறாங்கள் எண்டுதான் சொல்லவேணும் கண்டியளோ . இந்தக்காலத்திலையும் பெடி பெட்டையள் தாய் தேப்பனுக்கு தெரியாமல் லவ்சி உருகி இருக்கினம் . அதுகளை சொன்னால் மனுசனுக்கு பிறஸர் தான் ஏறும் . எப்பிடி பட்டாவது காயை மடக்கி போடவேணும் எண்டு கனக்க றிக்கியளை இந்தகாலத்து பெடியள் வைச்சிருக்கிறாங்கள் கண்டியளோ. பெடிச்சிக்கு பெடிச்சியின்ர பேரை இல்லாட்டில் படத்தை பச்சை குத்தி காட்டிறது. இடையில ஏதாவது ரெண்டு பேருக்கும் ராட்டல் எண்டால் கையிலை பிளேட்டாலை வெட்டிறது ( இதை ரெண்டு பேரும் செய்வினம்). பேந்து தாய் தேப்பனுக்கு மாற்றர் லீக் ஆச்சுதெண்டால் பெடிச்சியை கிளப்பி கொண்டு ஓடுறது எண்டு இவையள் செய்யிற அலப்பரையள் சொல்லி வேலையில்லை கண்டியளோ. உது ஊரிலையும் அப்பிடித்தான் இங்கையும் அப்பிடித்தான். இங்கை கொஞ்சம் கொஞ்சம் டெவலப் எண்டு தான் சொல்ல வேணும் . இங்கை பெடிச்சிக்கு பிள்ளையையும் குடுத்துப்போட்டு பெடிச்சியை கிளப்பி கொண்டு வேறை நாடுகளுக்கு போய் அங்கை இருந்து கொண்டு தாய் தேப்பனோடை கேம் ஐ கேக்கிறது. இது இந்தக்காலத்தியான் பெடி பெட்டையளின்ரை சேட்டையள்.


அந்த காலத்திலை பெடிச்சியை கிளப்பிக்கொண்டு ஓடினாலும் பெடிக்கு ஒரு பயம் எண்ட ஒண்டு இருக்கு. இந்த பாட்டிலை பெடி சொல்லுறான், “எடி ஆத்தை காட்டுக்குள்ளாலை போறம். பயப்பிடாமல் வா . இதுக்குள்ளை வாற அனிமல்ஸ் எண்டாலும் சரி கள்ளர் காடையர் எண்டாலும் சரி அவங்களோட ஏக் மானாய் மல்லுக்கு நிண்டு உன்னை காப்பாத்துவன். ஆனா உன்ரை சொந்தம் பந்தம் ஆராவது சண்டை பிடிக்க வந்தினம் எண்டால் நீ வீணாய் கவலைப்படுவாய். அது என்னாலை பொறுக்கேலாது கண்டியோ. அதாலை நான் எங்கையாவது ஓடி ஒளிச்சு போடுவன்” எண்டு சொல்லுறான் . இந்த சிற்றுவேசனை நற்றிணையிலை 362-ம் பாட்டிலை நம்ம கூட்டாளி மதுரை மருதனிள நாகனார் இப்பிடி சொல்லி இருக்கிறார் எண்டால் பாருங்கோவன் . 

வினையமை பாவையின் இயலி நுந்தைமனைவரை இறந்து வந்தனை யாயின்தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலிஅணிமிகு கானத்து அகன்புறம் பரந்தகடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கைமணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்திஅமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

நற்றிணை -362 மதுரை மருதனிள நாகனார்


உரை : சுருக்கு சுறுக்கர்

(Visited 5 times, 1 visits today)