சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 07 (ஒழிச்சு வை)

ஹாய் பெடியள்ஸ்!!!!!!!!!!

வந்த விசையத்தை சுறுக்காய் சொல்லிப்போட்டு போறன். நேற்று பொழுது போகாமல் இருந்ததாலை ஒருக்கால் லாச்சப்பல் பக்கம் தலையை காட்டினன். போனதுதான் போனம் எண்டு நான் வழக்கமாய் போற புத்தகக்கடைக்கு போய் கொஞ்சம் லோ எடுப்பம் எண்டு அங்கை போனன். கடைக்காற மாத்தையா நிண்டதாலை பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டு பம்பலாய் பொழுது போச்சுது. நான் மாதையாவோடை லோ எடுத்துக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு லுக்கு விட்டு கொண்டு இருந்தன். அப்ப ஒரு பெடி வந்தான். ரெண்டு பேருக்கும் சுத்ததமிழிலை வணக்கம் சொல்லிப்போட்டு,

“அண்ணை ஆயுத எழுத்து புத்தகம் இருக்கோ “?? எண்டான். என்ரை காது இதை கேட்டு கொஞ்சம் பொங்கீச்சுது. மாத்தையா ,

“உமக்கு ஆரையும் தெரியுமோ “? எண்டு ஒரு சேமணை கேள்வியை கேட்டார் .

வந்த பெடி உரு ஏறி,

“உங்களிட்டை இருக்கோ இல்லையோ?? இல்லாட்டில் நான் வேறை கடை பாக்கிறன் ” எண்டு புத்தக அலுமாரியளை பாத்தான்.

அங்கை புத்தகத்தை காணேலை .வந்த பெடி திரும்பி போக என்ரை மாத்தையா ” நில்லு தம்பி புத்தகம் கிடக்கு” எண்டு உள்ளுக்கை போய் ஒழிச்சு வைச்சிருந்த ஆயுத எழுத்து புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து குடுத்தார். எனக்கெண்டால் நான் மெட்றாசிலை பாரிஸ் கோர்னர் , பாண்டி பஜாரிலை நிக்கிறமாதிரி ஒரு பீலிங் . ஏனெண்டால் அங்கைதான் உந்த மஜா புத்தகங்கள் , சீடி க்கள் ஒழிச்சு வைச்சு சனங்களுக்கு விப்பாங்கள் , அதுவும் வலுகலாதியாய் கறுப்பு சொப்பிங் பாக்கிலை குடுக்கிறவங்கள்.

மாத்தையாவும் ஒரு கறுப்பு பையிலை போட்டு பதினைஞ்சு யூறோ வாங்கி கொண்டு பெடியை அனுப்பிவிட்டார். எனக்கெண்டால் அண்டம் கிண்டமெல்லாம் பத்திபோட்டுது. நான் மாத்தையாவை பாத்து ,

“உதென்ன விசர் வேலை பாக்கிறாய் ?? வெளிலை வைச்சு மரியாதையாய் புத்தகத்தை வில்லன்” எண்டு மாத்தையாவோட ஏறினன். அதுக்கு அந்தாள் சொல்லுது,

“உங்களுக்கு விஷயம் தெரியாது சுறுக்கர். பேந்து நான் கடை வைச்சிருக்கிறேலையோ”?? எண்டு . நான் கேட்டன், “அதென்ன தமிழ்க்கவி குஞ்சி எழுதின ஊழிக்காலத்தை பப்ளிக்கிலை வைச்சு விக்கிறாய் . இதுக்கு மட்டும் வித்தாரம் பறையிறாய் ” எண்டு .

சுறுக்கர் வீட்டை போங்கோ மனுசியெல்லொ தேடுவா எண்டு என்னை சமாளிச்சு வீட்டை அனுப்பிறதிலையே மாத்தையா பிறியப்பட்டார். நான் சொன்னன் “நீ என்ன மசிருக்கு புத்தகக்கடை வைச்சிருக்கிறாய்?? எழுதின ஆக்களை பாத்து பொன்னையங்கள் மாதிரி புத்தகம் விக்காதை . நீ வியாபாரி எண்டதையும் மறக்காதை” எண்டு நெவிள் பறக்க பேசிப்போட்டு வந்திட்டன் .அதென்ன பழக்கம் புத்தகத்தை ஒழிச்சு வைச்சு விக்கிறது?? அழுகல் பழக்கம் . அப்ப நான் வரட்டோ?

சுருக்கு சுறுக்கர்
06 மாசி 2015

 

(Visited 9 times, 1 visits today)