சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03

31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் – The bicolor parrot fish – Cetoscarus bicolor

இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் ” கிளிமூக்கு மீன் ” ஆகும் . இதை “கிளி மீன்” என்றும் சொல்வார்கள் . மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia….iki/Parrot_fish

0000000000000000000000000

32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா-HAMMERHEAD SHARK-Sphyrène

இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும். இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என்று வகைப்படுத்தலாம் . இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .

http://en.wikipedia….ammerhead_shark

0000000000000000000000

33 செம்மீன்- red sqirrel fish-Sargocentron hastatum

படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் ” செம்மீன் ” ஆகும் . இந்த மீனைப் பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள்.

http://en.wikipedia….ne_squirrelfish

00000000000000000000000

34 கோழி மீன்- Surgeon Fish-Paracanthurus hepatus

இந்தப்படத்திற்கான தூயதமிழ் ” கோழி மீன் ” ஆகும் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia….ki/Surgeon_Fish

00000000000000000000000

35 புள்ளி நண்டு- blue swimming crab- Portunus pelagicus

படத்தில் இருக்கும் மீனுக்கான தூயதமிழ் ” புள்ளி நண்டு ” ஆகும் . இதனை ” நீலக்கால் நண்டு ” அல்லது ” நாச்சிக்குடா நண்டு “என்றும் இலங்கையில் அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளில் நுளையுங்கள் .

http://ta.wikipedia….நீலக்கால்_நண்டு

http://en.wikipedia….tunus_pelagicus

00000000000000000000000000

36 நெத்தலி மீன்-Stolephorus indicus

படத்தில் இருக்கும் மீனின் தூயதமிழ் ” நெத்தலி மீன் ” ஆகும் . இந்தமீனை ” நெய்த்தோலி மீன் ” என்றும் அழைப்பார்கள் . இந்த மீனைப்பிடிக்கப் பலத்த போட்டி இருந்தாலும் , வழைமைபோல இசைக்கலைஞனே அதிஉயர்விருதான பச்சைப்புள்ளிக்குத் தெரிவாகின்றார் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .

http://en.wikipedia….ephorus_indicus

00000000000000000000000000

37 வாளை மீன்- Belt fish- Ribbon fish- Trichiurus haumela

இந்தப்படத்தில் இருக்கும் மீனினுடைய தூய தமிழ் ” வாளை மீன் “ஆகும் . இதை ” வாலை மீன் ” என்றும் சொல்வார்கள் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia….iki/Ribbon_fish

00000000000000000000000000

38 சள்ளை மீன் -spotted etroplus – orange chromide

படத்திலுள்ள மீனுக்கான சரியான தூயதமிழ் ” சள்ளை மீன் ” ஆகும் இந்த மீன் பரத்தி மீன் , பரடி மீன் . புரடி மீன் , செல்லேல் மீன் என்று தமிழகத்தில் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள்

http://en.wikipedia….Orange_chromide

March 23, 2013

(Visited 5 times, 1 visits today)