சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்- இறுதிப்பாகம்

வணக்கம் வாசகர்களே !!!

வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன். உண்மையில் இந்ததொடர் மிகவும் கடினமானது . ஏனெனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும். அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும். ஆனாலும், பொறுமையுடன் வாசித்த வாசகர்களுக்கு மிக்க நன்றி . நேர காலங்கள் கூடி வரும் வேளையில் இன்னுமொரு தொடரில் உங்களைச் சந்திக்கின்றேன். நன்றி.

கோமகன்

0000000000000000000000000000

 

40 கொள்ளுக் கலவாய் -comet grouper-Epinephelus morrhua

படத்திலுள்ள மீனுக்கான தூயதமிழ் ” கொள்ளுக் கலவாய் மீன் “ஆகும் .இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள் .

http://en.wikipedia….i/Comet_grouper

0000000000000000000000000000

41 சேவல் மீன் -lion fish-Pterois

படத்திலுள்ள மீனுக்கான தூயதமிழ் ” சேவல் மீன் ” ஆகும் . இதை ” சிங்க மீன் ” என்றும் அழைப்பர் . இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Lion_fish

0000000000000000000000000000

42 திரளி மீன் -Golden shiner fish-Notemigonus crysoleucas

படத்தில் உள்ள மீனிற்கான தூயதமிழ் ” திரளி மீன் ” ஆகும் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள்

http://en.wikipedia….i/Shiner_(fish)

00000000000000000000000000

43 நாக்கு மீன்- flat fish – sole fish – tongue sole fish-Cynoglossidae

படத்தில் உள்ள மீனிற்கான தூயதமிழ் “நாக்கு மீன் ” ஆகும் .இதனை ” மணங்கு மீன் ” என்றும் அழைப்பர் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .
http://en.wikipedia….iki/Sole_(fish)

முற்றும்

March 24, 2013

 

(Visited 9 times, 1 visits today)