பூவுக்கும் பெயருண்டு 08

41 செங்கோடுவரிப் பூ .- Plumbago rosea

 

00000000000000000000000000000000

42 செம்மல்ப் பூ – Jasminum grandiflorum

செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.

செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.

http://ta.wikipedia….rg/wiki/செம்மல்

0000000000000000000000

43 செருந்திப் பூ – Ochna squarrosa

அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது,

பன்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக்
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!

http://treesinsangam…ae%a4%e0%ae%bf/

சங்கப்பாடல்களில் செருந்தி எனக்குறிப்பிடப்படும் புல்லை நெட்டுக்கோரை என்றும் வாட்கோரை என்றும் இக்காலத்தில் கூறுகின்றனர். ( நீளமாக வளர்வதால் நெட்டுக்கோரை. வாள் போல் பூ பூப்பதால் வாட்கோரை. )

00000000000000000000000000000

44 செருவிளைப் பூ – Clitoria ternatea-albiflora

00000000000000000000000000000

45 சேடல்ப் பூ -Nyctanthes arbor-tristis

சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று. வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம். பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் பொருத்தமானதே.

http://ta.wikipedia…..org/wiki/சேடல்

பவழமல்லி அல்லது பவளமல்லி என்னும் இம்மரம் தென் – தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbortristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.

http://ta.wikipedia….g/wiki/பவழமல்லி

இம்மரம் 3 – 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும்.

நீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். வட அத்த கோளத்தில் இம்மரம் செப்டெம்பர் -டிசம்பர் வரை பூக்கும். இதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லி ஆகும். அதன் அறிவியற் பெயர்: Millingtonia hortensis
பவளமல்லிப் பூவை பாரிஜாதமலர் என்றும் அழைப்பர் .

http://ta.wikipedia….g/wiki/பவழமல்லி

0000000000000000000000000

46 ஞாழல்ப் பூ – Caesalpinia cucullata

குறுந்தொகை 328, பரணர், நெய்தல் திணை – தோழி சொன்னது

சிறுவீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இயங்கும் துறைவன்
நல்கிய நாள்தவச் சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக்கு உறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

http://treesinsangam…ress.com/ஞாழல்/

0000000000000000000000000000000

47 தணக்கம் பூ ( பல் பூந்தணக்கம் ) – synonym Gyrocarpus americanus

00000000000000000000000000

48 தளவம் பூ – Jasminum elongatum or Jasminum polyanthum


இந்தப் பூவை இப்பொழுது ஜாதிமல்லிகை அல்லது செம்முல்லைப் பூ என்றும் அழைப்பர் .

00000000000000000000000000000000

49 தாமரைப் பூ Nelumbium speciosum


தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம் ,இந்தியா , சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

தேவநேயப் பாவாணர், தும் – துமர் – தமர் – தமரை – தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம்.ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார்.

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.

தாமரைப்பூவில் முக்கியமான நிறங்கள் .

வெண்தாமரை — வெள்ளை நிறத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மலர்.
செந்தாமரை — சிவப்பு நிறத்தில் உள்ள சிவப்புத் தாமரை மலர்.

http://ta.wikipedia…..org/wiki/தாமரை

0000000000000000000000000

50 தாழைப் பூ -Cocos Nucifera L

குறுந்தொகை 117, இயற்றியவர் குன்றியனார், நெய்தல் திணை – தோழி சொன்னது .

மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கைவளையே.

http://treesinsangam…ant-screw-pine/

January 31, 2013

(Visited 5 times, 1 visits today)