பூவுக்கும் பெயருண்டு 11- இறுதிப்பாகம்

95 வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) – Plumbago rosea

வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும்.

மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர்.மதுரை மகளிர் கார்காலத்தில் சூடும் பூக்களில் ஒன்று ‘செங்கோட்டு வேரிப் பூ மாலை.

இருந்தையூரில் திருமாலின் படுக்கை பாம்பை வழிபட்டவர்கள் இரு காதுகளிலும் வேரி மலரைத் தொங்கவிட்டிருந்தனர்.

குரவை ஆட ஆய்ச்சியர் 7 பெண்களை நிறுத்தினர். அவர்களில் ஒருத்தி காரிக்காளையை அடக்கியவனைக் காதலித்தவள். அவள் தன் சீவிமுடித்த தன் கூந்தலில் வேரிமலர் சூடியிருந்தாள்.

ஓரி தன்னைக் காட்டில் கண்டு பாடிய புலவர் வன்பரணருக்கு நெய் போன்ற வேரியை(தேனை) உண்ணத் தந்தானாம் .

January 31, 2013

(Visited 14 times, 1 visits today)