பொருட்பால்-அரசியல்-சிற்றினம் சேராமை-Avoiding mean Associations-La non-fréquentation des gens Vils-Fréquentation des gens-45-460

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் 451

பெரியோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்: சிறியோர் அதையே சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வர் .

எனது கருத்து :

இந்தக் குறளைப் பாக்க எனக்கு சிரிப்பாய் வருகுது . எப்பிடியெண்டால் படிச்சவன் பண்பானவன் செத்தாலும் குள்ளப் புத்தி உள்ள ஆக்களோடை சேரமாட்டான் அவையை எட்டத்திலைதான் வச்சிருப்பான் . ஆனால் இவை என்ன செய்வினம் அவன்தான் ராசா எண்ட கணக்காய் அவனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பினம் .

The great of soul will mean association fear The mean of soul regard mean men as kinsmen dear.

La Grandeur redoute la Vileté. La Bassesse s’apparente à la Vileté.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. 452

நீர் , தான் நிலத்தின் இயல்புக்கு ஏற்பத் தன் இயல்பு திரிந்து அந்நிலத்தின் தன்மையுடையதாகும் . அதுபோல மக்களுக்கு அறிவு ,அவர்கள் சேர்ந்த இனத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும்

எனது கருத்து :

இடம் அறிந்து சேர் எண்ட ஒரு சொலவடை இருக்கு. ஒரு தண்ணி நிலத்திலை சேரேக்கை தன்ரை குணத்தை நிலத்துக்கு ஏத்தமாதிரி மாத்திப்போடும். அதேமாதிரித்தான் படிச்சவை எண்டு சொல்லுறவையின்ரை குணமும் சேருற இடத்தைப் பொறுத்து மாறி இருக்கும்

The waters’ virtues change with soil through which they flow; As man’s companionship so will his wisdom show.

L’eau est altérée par la nature du sol qu’elle traverse et prend les propriétés de celui-ci : de même, l’intelligence des hommes est altérée par ceux qu’ils fréquentent’ et s’approprie leurs caractères.

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். 453

மக்களுக்கு இயற்கை அறிவு மனத்தால் உண்டாகும் இவன் இத்தன்மையன் என்று உலகினரால் அறியப்படும் சொல் அவன் சேர்ந்த இனத்தல் ஏற்படும்

எனது கருத்து :

ஒருத்தன் என்னதான் படிச்சு அறிவாளியாய் இருந்தாலும் , அவன் சேர்ற கூட்டத்தை வைச்சுக் கொண்டுதான் அவனை இன்னார் எண்டு சொல்லிறது.
Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known.

Les sentiments de l’homme dépendent (de la tournure) de son esprit ; ainsi la réputation faite par lé monde à un homme est causée par la qualité de son entourage.

மனத்து உள்ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்து உள்ள ஆகும் அறிவு. 454

அறிவு , ஒருவனது மனத்தில் உள்ளது போலக்காட்டினாலும் அவன் சேர்ந்த இனத்தை ஒட்டியதாகவே உண்டாகும் .

எனது கருத்து :

ஒருத்தன் நல்ல அறிவாளியாய் இருக்கலாம் பிழையில்லை . ஆனால் அவன் சேர்ந்த இடம் பிழையெண்டால் அந்த அறிவு சேர்ந்த இடத்தாலையே வெளியிலை வரும். அதாலை இடம் பார்த்து உறவு கொள் எண்ட முதுமொழியையும் நாங்கள் பாக்கவேணும் பாருங்கோ.

Man’s wisdom seems the offspring of his mind; ‘Tis outcome of companionship we find.

Les sentiments semblent résider dans l’âme; ils sont, en réalité, le résultat de l’entourage.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.455

மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே இருக்கும்.

எனது கருத்து :

ஒருத்தன் சேர்ந்த இடம் கிளீனாய் இருந்தால் தான் அவனின்ரை மனமும் செய்கையளும் கிளீனாய் இருக்கும் கண்டியளோ .

Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw near.

La pureté du coeur et celle de l’action proviennent toutes les deux de la pureté des gens de l’entourage.

மனந்தூயார்க்கு எச்சம்நன்றுஆகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. 456

மனம் தூய்மையாக உடையவர்களுக்கு மக்கட்பேறு நன்றாகும் . இனம் தூய்மையாக உள்ளவர்க்கு எல்லாம் நன்மையாக முடியும் என்பதாம் .

எனது கருத்து :

மனம்போல வாழ்க்கை எண்டு சொல்லுவங்கள் . அதுபோலத்தான் இனமும் கள்ளம் சூது வாது இல்லாமல் கிளீனாய் இருந்தால் , அந்த இனம் நினைச்சதெல்லாம் நடக்கும் என்று நீங்கள் ஒன்னாலும் , தமிழன் எந்த இடத்திலை ஐயன் குறைஞ்சு நிண்டவன்?

From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deeds.

Les purs de cœur ont une bonne postérité et à ceux qui ont un bon entourage, il n’y a pas d’action qui ne soit bonne.

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும். 457

இவ்வுலகில் வாழும் மக்களுக்கு மனம் நலமுடையதாக இருந்தால் அது செல்வத்தைக் கொடுக்கும் . சேரும் இனம் நல்லதாக இருந்தால் அது செல்வத்தோடு எல்லாப் புகழையும் கொடுக்கும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு மனம் நல்லாய் இருந்தால் அவனுக்கு தேவையான எல்லாமே கிடைக்கும். அதோடை அவன் நல்லவையோடை சேர்ந்தால் அவினின்ரை கொடி எட்டி பறக்கும் எண்டு நீங்கள் சொன்னாலும் , இந்தக்காலத்திலை சந்தர்ப்பவாத கூட்டணியள் ஒண்டாய் சேர்ந்து கெட்டவனையும் அல்லோ நல்லவனாக்கிறாங்கள்?

Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain

La pureté du coeur donna la prospérité aux hommes, tandis que la pureté de l’entourage procure toutes les gloires.

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. 458

மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும் .

எனது கருத்து :

ஒருத்தன் என்னதான் படிச்சு அறிவாளியாய் இருந்தாலும் அவன் சேர்ற கூட்டத்தாலைதான் அவனுக்கு வலிமை வருகிது எண்ட சொல்லுறியள் .ஆனால்பாருங்கோ இப்ப சந்தர்பவாதக் கூட்டணியள் தானே வலிமையளை கொண்டு வருகுது.

To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong.

Bien qu’ils possèdent la bonté du cœur par leurs bonnes œuvres (antérieures), le bon entourage est un Vigoureux soutien pour les Sages.

மனநலத்தின் ஆகும் மறுமை ; மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. 459

மனத்தின் நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும் . அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும் .

எனது கருத்து :

ஒருத்தன் நல்லமனசாலை சந்தோசப்பட்டாலும் அவன் சேர்ற கூட்டத்தாலை சிறப்பாய் இருக்கிது எண்டு சொல்லுறியள். ஆனால் கூட்டு சேர்றது எண்டுறதே சூழ்நிலையளுக்கு ஏத்தமாதிரிதானே ஐயன் ?

Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong.

La bonté du cœur conduit aux délices du ciel et elle est fortifiée par le bon entourage.

நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீஇனத்தின்
அல்லல் படுப்தூஉம் இல். 460

ஒருவனுக்கு நல்லோர் சேர்க்கையினும் சிறந்த துணையும் வேறு இல்லை . தீயோர் கூட்டுறவினும் துன்பம் தரும் கொடிய பகையும் வேறு இல்லை.

எனது கருத்து :

ஒருத்தனுக்கு நல்ல கூட்டுகள்தான் விடிவைத் தரும் கூடாத கூட்டாலை துன்பமும் பகையும் வரும் எண்டு சொல்லுறியள் ஆனால் இண்டைக்கு பொய் பித்தலாட்ட கூட்டுகள்தானே ஒருத்தனுக்கு விடிவை தருகிது ?

Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe.

Il n’y a pas pour l’homme, de meilleur soutien que le bon entourage et il n’y a rien de plus préjudiciable, que le mauvais entourage.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(Visited 7 times, 1 visits today)