கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 12

ஆடிக்கூழ்

தேவையானவை:

ஒரு கைப்பிடி வறுத்த பயறு

கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக

வெட்டியது

ஒரு பேணி – பச்சரிசி மா

அரைமூடித்தேங்காய்ப்பால்

பனங்கட்டி

(கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு

மிளகுத்தூள் தேவையான அளவு

சீரகத்தூள் தேவையான அளவு

ஏலக்காய் – தேவையான அளவு

பக்குவம்:

முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச் சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச் சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது

கலவை:

இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்துகொள்ளவும்.பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும். எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும் அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள்,

சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்…

படிமானம்:

பூவரசம் இலை அல்லது பிலா இலையிலை தொன்னை செய்து எல்லாரும் சுத்திஇருந்து கூழ் குடியுங்கோ

January 31, 2013

(Visited 5 times, 1 visits today)