பூவுக்கும் பெயருண்டு 03

21 காயா பூ .

 

முல்லைப்பாட்டு – ஆசிரியர் நப்பூதனார்
கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்
………………………………………….அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில் (92 – 100)
 
கருத்துரை:
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், மலர் இதழ் நிறைந்த செங்காந்தள் உதிரம் நிறத்தில் மலர்ந்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய  வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து,எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில்……………
நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லை திணை – தலைவன் சொன்னது
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
செல்க பாக நின் தேரே! உவக்காண் !
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே
குறுந்தொகை 183. முல்லை திணை – ஔவையார், தலைவி சொன்னது
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
நம்போல் பசக்குங் காலைத் தம்போற்
சிறு தலை பிணையின் தீர்ந்த கோட்டு
இரலை மானையுங் காண்பர்கொல் நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பிற் புன்புலத் தானே.

 

 

0000000000000000000000000000000000000000000000000

22 காழ்வைப் பூ.

 

 

 

காழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. காழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரரவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை.< அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர்.
பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில் கட்டையைக் குறிக்கும். மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தனமர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்

நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்
……………………..மென்தோள்
துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்
அகில் உண விரித்த அம்மென் கூந்தலின்
மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி
செல்இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. [262-269]

கருத்துரை :
மென்மையான தோளும், ஆடையணிந்த இடையும் அசைந்தாடும் நடையுமுடைய மகளிர், அகில் புகை ஊட்டுவதற்காக விரித்துப் போட்டிருக்கும் கூந்தலைப் போன்று, நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான, மழை மேகங்கள், வெண்மேகங்களுக்கிடையே பரவித் தவழ்ந்து செல்லும். இம்மழை மேகங்கள் மூங்கில்கள் விளையும் உயர்ந்த சிகரங்களை முட்டி இடி இடித்து வீழ்ந்து ஏறிச் செல்லுகின்ற பெருமை பொருந்திய மலையுச்சியினையுடைய மலை நாட்டுக்குத் தலைவன். நல்லியக்கோடன் அப்போது பறித்த இளந்தளிரினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்தவன். புகழ் நிலைத்து நிற்றற்குரிய பண்புகளால் சிறந்தவன். இத்தகைய நல்லியக்கோடனை விரும்பி நீவீர் சென்றால், (அன்றெ பரிசில் கொடுத்து அனுப்பி வைப்பான்)
0000000000000000000000000000000
23 குடசம் பூ .
குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. குடை போன்று இருக்கும் பூ ‘குடசம்’. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகக் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.
சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.
0000000000000000000000000000
24 குரலி பூ ( சிறுசெங்குரலி )
000000000000000000000000000000000000
25 குரவம் பூ ( பல்லிணர்க் குரவம் )
நற்றிணை 266, கச்சிப்பேட்டு இளந்தச்சனார், முல்லை திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் கால் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்
எம் விட்டு அகறிர்ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே.
நற்றிணை 224, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்மினோ என்ன இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின்
பிரியலம் என்று தெளிந்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே.     
0000000000000000000000000000000000
26 குருகத்திப் பூ ( பைங் குருகத்தி )
000000000000000000000000000000000000000
27 .குருகிலை 
00000000000000000000000000000000
28 குவளைப் பூ.

Nymphaea

கபிலர் குறுந்தொகையில் குவளைப் பூவை வைத்து குறஞ்சித்திணையில் ஓர் அழகான ஒப்பீடு செய்கின்றார் அதாவது……….
மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே ( 13 ) .
 
விளக்கம்:
தலைவன் தோழியிடம் அவள் மனம் அமைதியுறும் வகையில் தன் பிரிவினைக் கூறிப் பிரிந்து செல்கிறான்.இந்நிலையில், தலைவன் பிரிவால் வருந்திய தலைவி தோழியிடம் கூறியது. மலை சார்ந்த சூழல் பின்னணியாய் அமைய, பெண்ணின் மனவுணர்வு காட்சியாய் விரிகிறது. மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.அங்கே குளிர்ச்சிக்குப் பஞ்சமில்லை.
தலைவியே சொல்கிறாள்… ‘குளிர்ச்சியான பாறைக்கல்லின் ஒரு பக்கத்தில் தலைவன் என்னோடு கூடியிருந்தான்.இப்போது என்னைப் பிரிந்து எனக்கு நோய் தந்தான். இதனால் ஏற்பட்ட வருத்தத்தினால் என் கண் மட்டுமல்ல;நின் கண்ணும் அல்லவா அழகிழந்தன.’என்று தன் தனிப்பட்ட துயரத்தோடு தோழியையும் உளப்படுத்திக் கூறுகின்றாள்.தலைவியின் இந்த அணுகுமுறையால் தோழியும் தலைவியின் துயரை நீக்குவதில் பெரும் முனைப்பு காட்டுவது இயல்புதானே?
0000000000000000000000000000000000000000
29 குருந்தம் பூ.
குறுந்தொகை 148, -இளங் கீரந்தையார், முல்லை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தலைவன் சொன்னபடி மழைக் காலத்திற்கு முன் வந்து விடுவான், இது கார் காலம்
இல்லை என்று கூறிய தோழிக்கு தலைவி உரைத்த பதில்
செல்வச் சிறாஅர் சிறு அடி பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசி னன்ன போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம் வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின் இது
கனவோ மற்றிது வினவுவல் யானே.
 
விளக்கம்:
செல்வச் சிறாஅர் – பணக்காரச் சிறுவர்கள், சிறு அடி பொலிந்த – சிறிய கால்களில் விளங்கிய, தவளை வாய – தவளை வாய், பொலஞ்செய் கிண்கிணிக் – பொன்னால் செய்த கொலுசு, காசி னன்ன – காசைப் போன்றது – போது ஈன் கொன்றை – மலர் மொட்டை ஈன்ற கொன்றை, குருந்தோடு அலம் வரும் – குருந்த மரத்தோடு சுழலும், பெருந்தண் காலையும் – மிகுந்த குளிர்ச்சியுடைய பருவத்தையும், கார் அன்று என்றி ஆயின் – கார் காலம் இல்லை என்று நீ சொல்வது ஆனால், இது – இது, கனவோ மற்றிது – மற்று இது கனவோ ,வினவுவல் யானே – கேட்கின்றேன் நானே.
00000000000000000000000000000000000000000
30 குளவிப் பூ.
நற்றிணை 376, கபிலர், குறிஞ்சி திணை – தோழி சொன்னது
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ அறன் இல் யாயே.
இந்தக் குளவிப் பூவை இப்பொழுது பன்னீர் பூ மரம் அல்லது மரமல்லிப் பூ என்றும் அழைப்பார்கள் .
(Visited 8 times, 1 visits today)