ரகசியத்தின் அரூப நிழல்கள் – டிலீப் டிடியே – ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்

‘மலைகள்’ இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற “பொறுப்புமிக்க சமூக காவலர்கள்” என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு.
ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் – ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் – இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே ‘மலைகள்’ இணையத்தில் கடந்த வருடம் ‘இவளதிகாரம்” என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன்.
பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்கொள்வதென்பது நெதர்லாந்தில் சட்டபூர்வமான தொழில். தமிழகத்தில் பிக் – பொஸ் நடப்பதைப்போல நெதர்லாந்தில் நடைபெறுகின்ற மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோவின் பெயர் அடம் அன்ட் ஈவ். யாருமில்லாத சிறு தீவொன்றில் நிர்வாணமாக இரு பெண்களையும் ஒரு ஆணையும் அல்லது இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அல்லது ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் படகு மூலம் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துவிடுவார்கள். தனக்கு தேர்ந்த துணைணை அவரவர் தேர்தெடுத்து காதல் செய்து வெற்றிகொள்ளவேண்டிய போட்டி இது. ஆகஇ காதல் என்ற கண்மூடித்தனமாக உணர்வில் விழுந்து காலப்போக்கில் நிர்வாணங்களை தரிசித்த பின்னர்இ உறவுகள் வெறுத்துப்போவதிலும் பார்க்கஇ நிர்வாணத்திலேயே காதலை ஆரம்பித்துக்கொண்டால், அந்த காதல் எவ்வாறானதாரு பாதையில் செல்கிறது என்பதை கண்டுகொள்வதற்கான பரிசோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அப்படியானால்இ இந்த நிகழ்ச்சியை தீவில் போய் நின்று வீடியோ எடுப்பவரும் ஒண்டுமில்லாமல்தான் நிற்பாரா என்ற அறிவுஜீவித்தனமான கேள்விகளை கேட்கப்படாது.
ஆக, உயிரின உற்பத்தியின் ஊற்றுக்கண்ணாக வழிபடப்படுகின்ற கலவிப்பொறிமுறைகளின் தற்கால நீட்சிளும் அவற்றின் இரகசிய பெறுமானங்களும் பொதுவெளிகளில் தாராளமாக பேசப்படுகின்ற விடயங்களாகிவிட்டன. அவற்றினால் சமூக மட்டங்களில் ஏற்படுகின்ற சமகால அதிர்வுகள் தவிர்க்க முடியாதவை. இவற்றினை பதிவுசெய்யவேண்டியதில் இலக்கியத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது. அந்த வகையில் லக்ஷ்மி செய்திருப்பது துணிச்சலான கட்டுடைப்பு. பின்னிரவுகளில் சிறிய விண்டோக்களாக கணனித்திரைகளில் ஓரமாக வைத்து வாசித்து வந்த விடயங்களை – குனிந்த தலைகளுக்குள் மாத்திரம் ரகசியங்களாக அடைகாக்கப்பட்டுவந்த உண்மை கதைகளை – பொதுவெளியில் குலைத்துப்போட்டிருக்கிறார்.
இதேவேளை ‘வல்லினம்” இதழில் போன வாரம் கோமகன் எழுதியுள்ள ‘டிலீப் டிடியே” என்ற பாலியல் விரக்திகொண்ட பெண்ணில் மனநிலையை மையமாக கொண்ட கதையும் கவனத்தை ஈர்த்துள்ள சிறுகதை.
‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனது மனதில் தொந்தரவு செய்துகொண்டிருந்த கதைக்கருவொன்றை எழுதுவதற்கு இந்த சமூகம் உட்பட நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் ” – என்பதை நிரூபித்துள்ள இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ரகசியத்தின் அரூப நிழல்கள்
http://malaigal.com/?p=10547
டிலீப் டிடியே
http://vallinam.com.my/version2/?p=4468
(Visited 20 times, 1 visits today)