அடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்

வணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே! இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ தொடர்பான அறிவித்தல் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது தொடர்பாக நான் தமிழக எழுத்தாளர்கள் பலரிடம் தொடர்பு கொள்வதுண்டு. அவர்களும் என்னுடன் தொடர்பாடலில் இருந்ததுண்டு. அவர்களுக்கு நடுகுழுமத்தின் சார்பில் நன்றிகள்.

யாரினதும் சிபாரிசுகள் இல்லாது அல்லது உள்ளடி வேலைகள் செய்யாது இன்று காலை தமிழக சிறப்பிதழ் தொடர்பாக எழுத்தாளர் சாருவிடம் ஓர் ஆக்கம் கேட்டு மின்னஞ்சல் இட்டிருந்தேன். நான் மின்னஞ்சல் செய்து இரண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளாகவே அவரது இணையத்தளத்தில் நான் அவரிடம் போட்டிருந்த மின்னஞ்சல் நக்கல் நளினங்களுடன் வெளியாகியது மட்டுமல்லாது அவரது முகநூலிலும் பதியப்பட்டிருந்தது.

ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் பொதுவெளியில் வெளியாகியதால் எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை மாற்றியமைத்தது. அதாவது தனது பண்பை உலகறியச்செய்து அவர்
அடி புண்ட சருவமாகி விட்டார். வாசகர் பரப்பில் நடு இணைய சிற்றிதழுக்கு என்று ஒரு இடமுண்டு. தமிழக சிறப்பிதழில் எல்லோரையும் கௌரவம் செய்ய வேண்டும் என்று எண்ணித்தான் செயற்படுகின்றோம். ஆனால் இப்படியான குறுகிய புத்தி உள்ளவர்களும் தங்களை அறியாது தங்களை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு. ஒருவேளை நடுவின் தலைமையாசிரியர் கோமகனை அசிங்கப்படுத்தியதாக இந்தப்பெருந்தகை எண்ணலாம் ஆனால் அசிங்கப்பட்டது சாருவே ஒழிய நடு குழுமம் இல்லை. ஏனெனில் சாருதான் தமிழகம் இல்லை. திட்டமிட்டவாறு ‘தமிழக சிறப்பிதழ் வெளியாகும். நன்றி.

கோமகன்

26 ஆனி 2019

நடு குழுமத்துக்காக

ரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…

https://www.facebook.com/charu.nivedita.9

(Visited 11 times, 1 visits today)