பிரான்சின் பொதுவேலை நிறுத்தம் தொடருமா இல்லையா?

கடந்த 05 ஆம் திகதியில் இருந்து இன்று வரை பொதுவேலை நிறுத்தம் பிரான்சின் பலபாகங்களிலும் தேசிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது . அரசின் அனைத்து துறைகளும் ஏறத்தாழ 97 வீதமான பிரெஞ் மக்கள் அரசின் புதிய ஓய்வூதியத் திட்டடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் எடுவார்ட் பிலிப் அரசின் புதிய ஓய்வூதியத்திட்டத்தை முன்னெடுத்து அரசின் நிலைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதன்படி 1975 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்கள் நடைமுறையில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திலும் 1975 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி 1975 ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களது ஓய்வூதியத்திற்கான உச்ச வயதெல்லை 64 ஆகின்றது. மற்றயவர்களுக்கு 62 வயதாகின்றது.

போக்குவரத்து துறையை சேர்ந்த தொழிலாளர் குறிப்பாக தொடருந்ததை செலுத்துபவர்கள், போக்குவரத்து அலுவலக பணியில் இருப்பவர்கள் பல சலுகைகளை அனுபவித்தவாறே 52 ஆவது வயதிற்குப் பின்னர் ஓய்வூதியம் எடுக்க முடிகிறது. ஆனால் மற்றைய துறைகளை சேர்ந்தவர்கள் போக்குவரத்து துறையின் சலுகைகளும் தமது வருமானத்தைக் கொடுத்து தமது 62 ஆவது வயது வரைக்கும் முழுமையான ஓய்வூதியத்திற்காக காத்திருக்க வேண்டியதாகின்றது. ஆக இங்கு இருவேறு பட்ட பாரபட்சங்கள் இருக்கின்றன.

எனக்கு இந்த அறிவிப்பை கேட்டவுடன் சந்திரிக்காவின் நேர மாற்ற அறிவிப்பே நினைவில் வந்தது. ஒருகாலத்தில் சந்திரிக்கா மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இலங்கையின் நேரத்தில் மாற்றத்தை கொண்டுவந்தார். அப்பொழுது சாதாரணப்பட்ட சனங்கள் இது பழைய நேரமா இல்லை சந்திரிகா நேரமா என்று கேட்டு தமது நேரத்தை கணக்கீடு செய்த காலமும் இலங்கையில்இருந்தது .

மேலோட்டமாக பார்க்கும்பொழுது குழப்பமான அறிவிப்பாக இருந்தாலும் நடைமுறை அரசு, அரசின் போக்குவரத்து துறைக்கு வைத்த ஆப்பாகவே இதை பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அறிவித்த பொதுவேலை நிறுத்தம் நாளையும் தொடருமா இல்லையா என்பது மில்லியன் யூரோ பெறுமதியான கேள்வி .

இந்த பொதுவேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு விரிவான கட்டுரையை வரும் தை மாத நடு இதழில் வாசுதேவன் எழுத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கோமகன்

11/12/2019

https://www.youtube.com/watch?v=HZnsi5Yesus&t=84s

(Visited 7 times, 1 visits today)