பூவுக்கும் பெயருண்டு – பாகம் 01

01.காந்தள் 

000000000000000000000000000000

02 . ஆம்பல்

00000000000000000000000000000000

03 அடும்புப் பூ 

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprae). சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில்.நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) ‘குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும்.

000000000000000000000000000000

04 அவரைப் பூ 

அவரைக் கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus). இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு.

00000000000000000000000000000

05 அனிச்சம் பூ

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும்.

00000000000000000000000000000000000

06 ஆத்திப் பூ 

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் எங்கும் காணப்படுவதுடன், இலங்கை , சீனா , திமோர் , இந்தியா ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது.
குறுந்தொகை 24. முல்லை திணை – பரணர் – தலைவி சொன்னது
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து 
எழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக் 
குழையக் கொடியோர் நாவே 
காதலர் அகலக் கல்லென் றவ்வே. 

0000000000000000000000000000000000000

07 அல்லிப் பூ 

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் , அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை , நீர்ச்சுனைகள் , மெதுவாக ஓடும் ஆறுகள் போன்றவற்றில் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும்.எகிப்து நாட்டில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும். இந்தப் பூவிற்குக் குமுதம் என்ற பெயரும் உண்டு .

00000000000000000000000000000000

08 ஆரம் பூ


SONY DSC

சந்தனம் மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரமாகும். இந்த மரம் இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.
சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும் 
துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய 
பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின் 
தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய 
நல்மா இலங்கை மன்ன ருள்ளும் 
மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள் 
உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன் 
களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி 
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை 
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை [116-125]
கருத்துரை : 
மணம் வீசும் மலர்களையுடைய புன்னை, அகில் சந்தனம் ஆகிய மரங்களின் கட்டைகளை நீர்த் துறையிலே நீராடுகின்ற மகளிருக்குத் தெப்பமாக நீர்ப்பெருக்குக் கொணர்ந்து தருகின்ற குற்றமில்லாத பழமையான புகழினையுடைய, தொன்மையான பெரிய இலங்கையின் பெயரைத் தான் கருவிலே தோன்றிய போதே பெற்று, நல் இலங்கை நாட்டை ஆண்ட மன்னருள்ளும் குறையின்றி விளங்கிய குற்றமில்லாதவன். குறி தப்பாது வாளேந்தி வெற்றி பெற்ற வீரன். வலிமையில் புலியினைப் போன்றவன். ஓவியர் குடியிலே பிறந்தவன். பெருமைக்கு உரியவன். யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்புடைய வீரக்கழல் ஒளிவீசுகின்ற திருந்திய அடியினை உடையவன். பெண் யானைக் கூட்டங்களை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்த மழை போலும் கைகளை உடையவன். பல வாத்தியங்களை இசைக்கும் கூத்தர்களைப் பாதுகாப்பவன். பெரும் புகழினை உடையவன்.

000000000000000000000000000000000

09 ஆவிரைப் பூ
ஆவிரை (Cassia auriculata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும் . இந்தப் பூ இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது.
000000000000000000000000000
10 இருள்நாறிப் பூ ( நள்ளிருள் நாறி )

Beautiful White Jasmine Flowers on Shrub

இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது.
தொடரும்

(Visited 3 times, 1 visits today)