பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும்

இந்த நிகழ்வை புறக்கணித்த அந்த சில நண்பர்கள், நிகழ்வுக்கு நேரடியாக வந்து என்னென்ன காரணங்களுக்காக இதை புறக்கணிக்கின்றோம் என்று ஓர் துண்டுப் பிரசுர வாயிலாக சொல்லியிருந்தால் அந்தப் புறக்கணிப்பு உண்மையில் அர்த்தமுடையதாக இருந்திருக்கும். இதுவே இலக்கியப்பரப்பில் உள்ள அறமுமாகும். இறுதியில் அவர்களது புறக்கணிப்பானது ஐந்து பேர் கூடியிருந்து ஈர் பேன் பார்த்து பரஸ்பரம் முதுகு சொறிதலிலேயே முடிந்துவிட்டது. தங்களது கருத்துக்களை பொதுவெளியில் சொல்வதற்கு தில்லும், தினாவெட்டும் இல்லாத இவர்கள் இனி வருங்காலங்களில் பாரிஸ் இலக்கியப்பரப்பில் இலக்கியம் பற்றி பேசுவதற்கு எதுவித அருகதையும் யோக்கியத்தையும் அற்றவர்களாகின்றர். அத்துடன் ஆயுத எழுத்துக்கு அருகிலே ஆக்காட்டி எட்டாவது இதழும் வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் ஆக்காட்டி தலைமை ஆசிரியர் மற்றயவர்களுடன் சேர்ந்து ஈர் பேன் பார்த்துகொண்டு பரஸ்பரம் முதுகு சொறிந்தது ஆக்காடியின் பறப்பின் மீதான சந்தேகங்களை ( ஓர்  குறிப்பிட்ட தளத்தின் கைப்பொம்மையாக மாறுதல் ) வலுப்படுத்துகின்றது . மேலும், ஆயுத எழுத்து நாவலானது யாழ்ப்பாணத்தில் மட்டுமே பலத்த ஆதரவுடன் பல்வேறு தளங்களில் இருந்து வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பில் வெற்றிகரமாக நடந்தது . அங்கு இருக்கின்ற நாகரீகத்தை கடக்க புலம்( ன் ) பெயர்ந்தவர்களுக்கு நீண்டகாலம் .எடுக்கும் போல் தெரிகின்றது. இந்த ஐந்தாறுபேர் இல்லாவிடிலும் நிகழ்வு உண்மையான இலக்கிய ஆர்வலர்களுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. நன்றி
பிற்குறிப்பு :
எனது நிகழ்வுக்காக இவர்கள் வரவில்லையே என்ற காழ்புணர்வில் எழுதப்பட்ட ஓர் நிலைத்தகவல் இல்லை. இலக்கியப்பரப்பில் உள்ள வறுமை நிலையில் உள்ள இவர்களது பார்வையை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.
கோமகன்
 
25 ஐப்பசி 2015
(Visited 4 times, 1 visits today)