உடல்மொழி-கட்டுரை

உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், சலிப்பு, தளர்வான நிலை, போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம்

கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) ஆகியவை அனைத்து வகையான சொல்லில் இல்லாத தகவல்தொடர்பு வகைகளாகும். உடல் அசைவு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், ஆராய்ச்சிகளின் படி இதனால் “தகவல்தொடர்பு கடினமானதாக இருக்கும்போது, மன ரீதியான சிரமம் குறைக்கப்படுகிறது” என்பதே அதற்குக் காரணமாகும்.உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள், அவற்றைப் பயன்படுத்தும் நபரைப் பற்றிய பல விவரங்களை அறியத்தரக்கூடியவை. எடுத்துக்காட்டுக்கு, முகபாவங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அழுத்தமாகக் கூற அல்லது ஒரு செய்தியை வெளிப்படுத்த உதவுகின்றன, உடலின் நிலையானது சலிப்பாக உள்ளதை அல்லது மிகவும் ஆர்வமாக உள்ளதைக் காண்பிக்கலாம், மேலும் தொடுதலானது ஊக்குவிப்பதையோ அல்லது எச்சரிப்பதையோ உணர்த்தலாம்.

ஒரு நபர் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டிருப்பது என்பது மிகவும் அடிப்படையானதும் சக்தி வாய்ந்ததுமான உடல்மொழி சைகையாகும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட நபர் தனக்கும் பிறருக்கும் இடையே தன்னையறியாமல் ஒரு பெரும் உணர்வு நிலையற்ற வேலியொன்றை சிந்தையில் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அந்த நபரின் கைகளைத் தேய்ப்பதன் மூலம் அல்லது சேர்த்துப் பிடிப்பதன் மூலம் உணரக்கூடிய குளிர்ச்சியையும் அவர் கொண்டுள்ளார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். ஒட்டுமொத்த சூழல் உகந்ததாக இருக்கும்பட்சத்தில், அந்த நபர் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்துக் கொண்டுள்ளார் எனவும் உணர்த்துவதாக இருக்கும். ஆனால், தீவிரமான அல்லது சவாலான ஒரு சூழ்நிலையில், ஒரு நபர் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் கொள்ளலாம். குறிப்பாக அந்த நபர் பேசுபவரிடமிருந்து விலகி சாய்ந்திருக்கும்பட்சத்தில் இது அநேகமாக உண்மையாக இருக்கும். கடுமையான அல்லது வெறுமையான முகத் தோற்றமானது பெரும்பாலும் நேரடியான விரோதத்தைக் குறிக்கிறது.

தொடர்ந்து கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த நபர் பேசுபவரின் கருத்துக்கு நேர்மறையாக சிந்திக்கிறார் எனப் பொருள். பேசுபவரின் மேல் அந்த நபருக்கு நம்பிக்கையில்லை, அதனால் ‘அவர் மேல் ஒரு கண் வைத்தவாறே இருக்கிறார்’ என இதற்கு மற்றொரு அர்த்தமும் கொள்ளலாம். பார்வைத் தொடர்பு குறைவாக இருப்பது எதிர்மறையான தன்மையையே குறிக்கும். மற்றொருபுறம், ஏக்க நோய்கள் உள்ள நபர்கள் பெரும்பாலும் இயல்பாக சிரமமின்றி மற்றவருடன் பார்வைத் தொடர்பு வைத்திருக்க முடியாது. பேசும்போதான பார்வைத் தொடர்பு என்பது பெரும்பாலும் இரண்டாம் நிலையிலுள்ளதும், தவறான பொருளை வழங்குவதாகவும் கூட உள்ளது, ஏனெனில் சிறுவயது முதலே நாம் அவ்வாறு கண்களைப் பார்த்துப் பேசுமாறே பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். ஒரு நபர் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கைகட்டி நின்றால், அப்போது அவரது பார்வையானது, அவருக்கு ஏதோ ஒரு விஷயம் தொல்லையளிக்கிறது அதை அவர் சொல்ல நினைக்கிறார் என்று குறிக்கலாம். அல்லது உங்கள் கண்ணை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவர் உங்கள் பேச்சை ஏதோ ஒன்றினைக் கொண்டு புறக்கணிக்கிறார் எனப் பொருளாகும். அவர் நேராக உங்களையே பார்த்துக்கொண்டிருந்தாலும் அவரது கவனம் உங்கள் பேச்சில் இல்லை எனப் புரிந்துகொள்ளலாம். மேலும் ஒரு நபர் இருக்கும் மூன்று விதமான நிலைகளை வெளிப்படுத்தும் தரநிலையான மூன்று விதமான பார்க்கும் விதங்கள் உள்ளன. ஒரு நபர் ஒரு கண்ணிலிருந்தும் பின்னர் மற்றொரு கண்ணிலிருந்தும் பின்னர் நெற்றியை நோக்கியும் பார்த்தால், அவர் அதிகாரம் எடுத்துக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம். அதே ஒருவர் ஒரு கண்ணிலிருந்து மற்றொரு கண்ணிற்கும் பின்னர் மூக்கு நோக்கியும் பார்வையைத் திருப்பினால், அது அவர் இரு சாராருக்கும் பெரும்பான்மை பெறாதபடி சிறந்த “நிலை உரையாடல்” என அவர்கள் கருதக்கூடிய ஒரு நிலைக்குச் செல்கிறார் என்பதற்கு அடையாளமாகும். இதில் கடைசியாக ஒரு கண்னிலிருந்து மற்றொரு கண் மற்றும் பின்னர் உதடுகள் நோக்கிப் பார்வையிடுபவரின் உடல்மொழியாகும். இது வலிமையான காதல் உணர்வின் வெளிப்பாடாகும்.

வேறொரு புறம் திரும்பி உற்றுப்பார்க்கும் பார்வையானது நம்பிக்கையின்மையைக் குறிப்பதாகும், காதைத் தொடுவது அல்லது தாடையைச் சொறிவது ஆகியவையும் இதையே உணர்த்தும் உடல்மொழிகளாகும். ஒரு நபர் அடுத்தவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரது கவனம் எப்போதும் இங்குமங்கும் அலைந்துகொண்டே இருக்கும், மேலும் நீண்ட நேரத்திற்கு கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும்.

ஒருவருக்கு சலிப்பு உள்ளதை, தலை ஒருபக்கம் சாய்ந்திருப்பதைக் கொண்டோ, கண்கள் பேசுபவரையே நேராகப் பார்க்கையிலோ அல்லது கவனம் குறைவாகத் தென்படுவதைக் கொண்டோ கண்டறியலாம்.தலையைச் சாய்த்து வைத்திருத்தல் என்பது புண்பட்ட கழுத்து அல்லது பார்வைத் தெளிவின்மையைக் குறிக்கலாம், மேலும் கவனம் செலுத்தாத பார்வையானது கவனிப்பவருக்கு பார்வையில் ஏதேனும் கோளாறு இருப்பதைக் குறிக்கலாம்.

உடலின் நிலை அல்லது நீடித்த பார்வை ஆகியவை அவரது ஆர்வத்தை உணர்த்தலாம். நிற்பது போன்ற நிலைகளும் முறையாகக் கவனிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

வஞ்சகம் அல்லது ஏதேனும் விஷயத்தை மறைப்பது ஆகியவற்றை பேசும் போது முகத்தைத் தொடுவதைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். அதிகமாக கண்ணடித்தல் (கண்களை மூடித் திறத்தல்) என்பது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதற்கான அனைவரும் அறிந்த அடையாளமாகும். கண்ணிமை மூடாமல் இருப்பதும் கூட பொய் சொல்வதைக் குறிக்கலாம், மேலும் இது அதிகமாக கண்ணிமை மூடித்திறப்பதை விட நம்பகமான உடல்மொழியாகும் என சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சிலர் (மதி இறுக்கக் குறைபாடு உள்ளவர்கள்) உடல்மொழியைப் பயன்படுத்துவதோ அல்லது புரிந்துகொள்வதோ வேறுபடுகிறது, அல்லது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களின் உடல் அசைவுகளையும் முகபாவனைகளையும் இயல்பான உடல்மொழிச் சூழலைப் பொறுத்து புரிந்துகொண்டால் (அல்லது அதைச் செய்வதில் தவறினால்), அது தவறான புரிதலுக்கு வழிகோலக்கூடும் (குறிப்பாக பேசும் மொழியைவிட உடல்மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும்பட்சத்தில்).வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் உடல்மொழிகளை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

April 26, 2011

(Visited 2 times, 1 visits today)